நடிகர் விஜய் சேதுபதி போக்கிரி பட இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் போக்கிரி. இந்த படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை தமிழில் நடிகர் பிரபுதேவா, விஜய் நடிப்பில் போக்கிரி என்ற பெயரிலேயே ரீமேக் செய்திருந்தார். இந்தியில் வாண்டட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதேபோல் இவரது இயக்கத்தில் வெளியான பிசினஸ்மேன், டெம்பர் ஆகிய படங்களும் ரீமிக்ஸ் செய்யப்பட்டன. ஆனால் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான சில படங்கள் சமீப காலமாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் பூரி ஜெகன்நாத்திடம், விஜய் சேதுபதி கதை கேட்டிருந்த நிலையில் அதற்கு விஜய் சேதுபதி நோ சொல்லிவிட்டார் என்றும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர்களது கூட்டணியில் புதிய படம் வருங்காலத்தில் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.