Homeசெய்திகள்சினிமா'மெட்ராஸ்காரன்' படத்தின் முதல் பாடலை வெளியிடும் விஜய் சேதுபதி!

‘மெட்ராஸ்காரன்’ படத்தின் முதல் பாடலை வெளியிடும் விஜய் சேதுபதி!

-

நடிகர் விஜய் சேதுபதி மெட்ராஸ்காரன் படத்தின் முதல் பாடலை வெளியிட இருக்கிறார்.'மெட்ராஸ்காரன்' படத்தின் முதல் பாடலை வெளியிடும் விஜய் சேதுபதி!

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான ஷேன் நிகாம் தற்போது தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு மெட்ராஸ்காரன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் கலையரசன், ஷேன் நிகாமுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் நிஹாரிகா பாண்டியராஜன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தினை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். எஸ் ஆர் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாம் சி எஸ் இதற்கு இசை அமைத்திருக்கிறார். பிரசன்னா எஸ் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஆர் வசந்தகுமார் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். 'மெட்ராஸ்காரன்' படத்தின் முதல் பாடலை வெளியிடும் விஜய் சேதுபதி!இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத்தொடர்ந்து டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து தை தக்கா கல்யாணம் எனும் முதல் பாடல் இன்று (செப்டம்பர் 18) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்துள்ளனர். அதே சமயம் இப்பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

MUST READ