Homeசெய்திகள்சினிமாசிங்கிளாக சம்பவம் செய்த விஜய் சேதுபதி..... 100 கோடியை தட்டி தூக்கிய 'மகாராஜா'!

சிங்கிளாக சம்பவம் செய்த விஜய் சேதுபதி….. 100 கோடியை தட்டி தூக்கிய ‘மகாராஜா’!

-

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். சிங்கிளாக சம்பவம் செய்த விஜய் சேதுபதி..... 100 கோடியை தட்டி தூக்கிய மகாராஜா!ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அஜனீஸ் லோக்நாத் இதற்கு இசை அமைத்திருந்தார். இதில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, அபிராமி, நட்டி நடராஜ், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வித்தியாசமான கதை களத்தில் வெளியான இந்த படம் முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன்படி விஜய் சேதுபதி ஐம்பதாவது படமாக வெளியான இந்த படம் அவருக்கு சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளது. சமீப காலமாக விஜய் சேதுபதி சோலோ ஹீரோவாக நடித்த திரைப்படங்களை விட வில்லனாக நடித்த திரைப்படங்கள் தான் வசூல் வேட்டை நடத்தியது.

ஆனால் தற்போது முதன் முறையாக விஜய் சேதுபதி சிங்கிளாக களமிறங்கிய மகாராஜா திரைப்படம் 20 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களிலும் இந்த படம் அதிக வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ