Homeசெய்திகள்சினிமா"விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' - திரை விமர்சனம்"

“விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – திரை விமர்சனம்”

-

- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் “யாதும் ஊரே யாவரும் கேளிர் ” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இயக்கியுள்ளார்.மேலும் இந்த படம் மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவிலும், நிவாஸ் கே பிரசன்னாவின் இசையிலும் வெளிவந்துள்ளது. இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் மேகா ஆகாஷ், விவேக், கனிகா, ரித்விகா, விஸ்வ குமார் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவும் இயக்குனர் மகிழ் திருமேனியும் நடித்துள்ளனர்.மகிழ்திருமேனி இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஈழத் தமிழர்களின் இன்னல்களை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் கதையானது, இலங்கை போரில் குடும்பத்தை இழந்து தவிக்கும் சிறுவனை பாதிரியார் ஒருவர் லண்டனுக்கு அனுப்பி வைக்கிறார். அதன் பின், 18 ஆண்டுகள் கழித்து கிருபாநிதி என்ற பெயரில் கொடைக்கானலுக்கு வரும் அச்சிறுவனான விஜய் சேதுபதி தன்னை மீண்டும் முகாமில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்கிறார். சிறு வயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்ட இவர் பாதிரியாராக நடித்திருக்கும் விவேக்-உடன், தன் பெயர் புனிதன் என்று அறிமுகமாகிறார்.இதைத்தொடர்ந்து மெட்டில்டா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மேகா ஆகாஷை காதலிக்கிறார்.

மறுபுறம் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த மகிழ் திருமேனி விஜய் சேதுபதியை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதி உண்மையில் யார்? ஏன் போலீஸ் இவரை தேடிக் கொண்டிருக்கிறது? என்பது தான் இப்படத்தின் முழு கதையாகும்.பல ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்த நிலையில் இப்படம் பலருக்கும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

படத்தில் மேகா ஆகாஷ், விவேக், ரித்விகா, இவர்களின் கதாபாத்திரம் சரியாக அமையவில்லையாம்.
கனிகாவை தவிர்த்து வேறு யாருக்கும் சரியான கதாபாத்திரம் வழங்கவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது. படத்தின் முதல் பாதி தொடர்பே இல்லாமல் இருக்கிறது என்றும் படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு எரிச்சலூட்டுகிறது என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதியின் கிளைமேக்ஸ், விஜய் சேதுபதி _ மகிழ் திருமேனி இருவரின் மோதல் என இருந்தாலும் மோசமான திரை கதையாலும் சம்பந்தமில்லாத காட்சி அமைப்பினாலும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம் நீண்ட காலமாக இலங்கை போரில் தமிழர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை பற்றி பேசக்கூடிய நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டக்கூடியது என்றாலும் ஈழத் தமிழர்களுக்கு சேர வேண்டிய நியாயத்தை இப்படத்தின் மூலம் கொண்டு வரவில்லை என்று பலர் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அகதிகள் நசுக்கப்படுவதையும் பற்றி ட்ரைலரிலேயே குறிப்பிட்டிருந்த இத்திரைப்படம் தற்போது பார்வையாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ