Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் 50வது பட பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் 50வது பட பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

விஜய் சேதுபதியின் 50வது பட பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஹீரோ மற்றும் வில்லன் என தமிழ் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பழமொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான “மகாராஜா” படத்தின் பர்ஸ்ட் லுக் செப்டம்பர் 10 அன்று வெளியாக உள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். குரங்கு பொம்மை படத்தின் இயக்குனரான நித்திலன் சாமிநாதன் இதனை இயக்குகிறார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் டைட்டில் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. போஸ்டரில் விஜய் சேதுபதியின் லுக் எவ்வாறு இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். குரங்கு பொம்மை படத்தைப் போலவே இப்படத்திலும் ஒரு ஸ்ட்ராங்கான கன்டென்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ