நடிகர் விஜய், லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விஜயின் 68வது படமாகும். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். சித்தார்த்தா நுனி படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மைக் மோகன் இதில் வில்லனாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் பின்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படம் செப்டம்பர் 5ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் படத்தின் முன்னோட்ட வீடியோவும் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதைத்தொடர்ந்து மூன்றாவது பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா எப்போது? என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் நடிகர் விஜய், கட்சி மாநாடு போன்ற அரசியல் தொடர்பான வேலைகளில் பிஸியாக இருப்பதால் தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் விழா நடைபெற 50 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -