Homeசெய்திகள்சினிமாரஷ்யாவில் படப்பிடிப்பு, அமெரிக்காவில் பின்னணி வேலைகள்... அசத்தும் கோட் படக்குழு...

ரஷ்யாவில் படப்பிடிப்பு, அமெரிக்காவில் பின்னணி வேலைகள்… அசத்தும் கோட் படக்குழு…

-

விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒரு பக்கம் படப்பிடிப்பும், மற்றொரு பக்கம் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

ஒட்டுமொத்த இந்திய திரைஉலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விஜய். டோலிவுட், சாண்டல்வுட், மோலிவுட் என விஜய்க்கு அனைத்து திரையுலகிலும் ரசிகர்கள் ஏராளம். விஜய் நடிப்பில் வௌியான லியோ படம் பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான லியோ, சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய ஹிட் அடித்தது.

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படம் கோட். அதாவது, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பிரேம்ஜி உள்பட வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நாயர்களும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகள் மற்றும் சென்னை என மாறி மாறி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கோட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் உள்பட படக்குழுவினர் ரஷ்யா பறந்துள்ளனர். அதே சமயம், இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளும், பின்னணி வேலைகளும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகின்றன.

MUST READ