நடிகர் விஜய் கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது. அதைத்தொடர்ந்து விஜயின் 68வது திரைப்படமாக பொதுவாக இருக்கும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படம் சுருக்கமாக தி கோட் என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தை சென்னை 600028, கோவா, சரோஜா, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு மிகப்பிரம்மாண்டமாக இயக்கியிருக்கிறார்.
இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். சித்தார்த்தா நுனி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார்.
இதில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து படமானது வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியான நிலையில் சமீபத்தில் இதன் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது.
அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.
அதேபோல் தற்போதும் சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
- Advertisement -