Homeசெய்திகள்சினிமாநேற்று ரூ.2 லட்சம், இன்று ரூ.3 லட்சம்... களத்தில் நடிகர் பாலா...

நேற்று ரூ.2 லட்சம், இன்று ரூ.3 லட்சம்… களத்தில் நடிகர் பாலா…

-

நடிகர் பாலா சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை துரைப்பாக்கம் பகுதி மக்களுக்கு வழங்கி உள்ளார்.

சென்னையை தலைகீழாக புரட்டிப்போட்ட புயல் மிக்ஜாம். கடந்த சில நாட்களாக புயலின் தாக்கத்தால் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து. சென்னை மட்டுமன்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. வேளச்சேரி, துரைப்பாக்கம், தாம்பரம், மயிலாப்பூர், என அனைத்து பகுதிகளும் வெள்ளநீரில் மூழ்கியது. வேளச்சேரியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பலர் சிக்கி உயிருக்கு போராடினர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

வெள்ளம் முழுவதும் வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி பால், உணவு, குடிநீர் கூட இல்லாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். ஒரு பால் பாக்கெட் கூட வாங்க முடியாமல் மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகினர். அதுமட்டுமன்றி மின்சாரம் தொலைதொடர்பு ஆகிய சேவைகளும் முற்றிலுமாக முடங்கின. இதனால், அவசர தேவைகளுக்கு கூட அழைக்க முடியாத சூழல் உருவாகியது. இந்நிலையில், அரசு, அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3 லட்சம் ரூபாய் செலவில் நிவாரணப் பொருட்களை நடிகர் பாலா வழங்கியுள்ளார். அப்பகுதியில் உள்ள 120 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, உடை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொடுத்துள்ளார். ஏற்கனவே, அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ