Homeசெய்திகள்சினிமாஅழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து வில்லனாகவும் களமிறங்கும் விஜய்.....'GOAT' அப்டேட்!

அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து வில்லனாகவும் களமிறங்கும் விஜய்…..’GOAT’ அப்டேட்!

-

அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து வில்லனாகவும் களமிறங்கும் விஜய்.....'GOAT' அப்டேட்!விஜய் நடிக்கும் 68 வது படத்திற்கு “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என பெயரிடப்பட்டு படப்பிடிப்புகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து வில்லனாகவும் களமிறங்கும் விஜய்.....'GOAT' அப்டேட்!விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடிக்கின்றனர். திட்டமிட்டபடி இப்படத்தில் படப்பிடிப்புகள் சரியான வேகத்தில் நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்திற்குள் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து விடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் ஜூன் அல்லது ஜூலை மாதம் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து வில்லனாகவும் களமிறங்கும் விஜய்.....'GOAT' அப்டேட்! மேலும் GOAT படத்தில் வில்லன் யார் என்ற கேள்வியும் பரவலாக பரவி வருகிறது. குறிப்பாக மைக் மோகன் தான் இப்படத்தின் மெயின் வில்லன் எனவும் தகவல்கள் வெளியாகின. தற்போது இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய்யின் கதாபாத்திரத்தில் ஒருவர் எதிர்மறை கதாபாத்திரத்தில், வில்லன் ரோலில் நடித்துள்ளார் எனவும் செய்திகள் கசிந்துள்ளன. ஏற்கனவே விஜய் இரட்டை வேடங்களில் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் ஒரு விஜய் வில்லனாக நடித்திருப்பார். இந்நிலையில் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது மட்டுமல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் விஜயை வில்லனாக பார்த்தால் மாஸாக இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ