Homeசெய்திகள்சினிமாதவெக தலைவராக கேரள மக்களை சந்திக்கும் விஜய்!

தவெக தலைவராக கேரள மக்களை சந்திக்கும் விஜய்!

-

நடிகர் விஜய் தற்போது தனது 68 ஆவது படத்தில் நடித்து வருகிறார். தி கிரேட்டெஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தவெக தலைவராக கேரள மக்களை சந்திக்கும் விஜய்!யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, அஜ்மல், வைபவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தில் நடிகர் விஜய், இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் டிஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் விஜய், இளமையான தோற்றத்தில் காண்பிக்கப்பட இருக்கிறார் எனவும் தகவல்கள் ஏற்கனவே வெளியானது. அதன்படி படத்தின் படப்பிடிப்புகளும் சென்னை, ரஷ்யா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தவெக தலைவராக கேரள மக்களை சந்திக்கும் விஜய்!இந்நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை திருவனந்தபுரத்தில் படமாக்கி வருகின்றனர். இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக கேரளா ரசிகர்களை சந்திக்க உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் காவலன் படத்திற்கு பிறகு இப்போதுதான் கேரளாவிற்கு செல்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் காவலன் படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற போது, அதாவது 2010 ஆம் ஆண்டில் கேரள ரசிகர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ