Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்..... மகிழ்ச்சியுடன் அறிவித்த தேமுதிக நிர்வாகம்!

விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்….. மகிழ்ச்சியுடன் அறிவித்த தேமுதிக நிர்வாகம்!

-

விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்..... மகிழ்ச்சியுடன் அறிவித்த தேமுதிக நிர்வாகம்!பிரபல நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனைக்காக மட்டுமே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறிவந்த நிலையில் திடீரென கடந்த நவம்பர் 29ஆம் தேதி விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த சமயம் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும், நுரையீரல் சம்பந்தமான மருத்துவ நிபுணர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும் பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இது குறித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். அதனால் யாரும் வீண் வதந்திகளை நம்பவும் வேண்டாம் பரப்பவும் வேண்டாம் என வீடியோ ஒன்றை வெளியிட்டு கேட்டுக் கொண்டார். அத்துடன் விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்..... மகிழ்ச்சியுடன் அறிவித்த தேமுதிக நிர்வாகம்!

அதைத்தொடர்ந்து விஜயகாந்த் வீடு திரும்பியதாகவும், மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில்தான் மியாட் மருத்துவமனை நிர்வாகம், டிசம்பர் 11 ஆம் நாளான இன்று விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்..... மகிழ்ச்சியுடன் அறிவித்த தேமுதிக நிர்வாகம்!மேலும் தேமுதிக நிர்வாகத்தின் சார்பிலும் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை டிச்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

MUST READ