படை தலைவன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் படை தலைவன். இந்த படத்தினை அன்பு எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தை விஜே கம்பைன்ஸ் நிறுவனமும் சுமித் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இசைஞானி இளையராஜா இதற்கு இசை அமைத்திருக்கிறார். சதீஷ்குமார் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். யானையை மையமாக வைத்து காட்டுக்குள் நடக்கும் சம்பவத்தை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் சண்முகபாண்டியனுடன் இணைந்து கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரில் ஆக்ஷன் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மேலும் ஏற்கனவே வெளியான தகவலின் படி மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ளார். இதனை இந்த ட்ரெய்லரின் இறுதியில் விஜயகாந்தின் கண்களை மட்டும் காட்டியுள்ளனர். அடுத்தது இந்த படம் விரைவில் திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.