Homeசெய்திகள்சினிமாமாமனிதன் விஜயகாந்தின் பிறந்த தினம் இன்று!

மாமனிதன் விஜயகாந்தின் பிறந்த தினம் இன்று!

-

உலகில் பல மனிதர்கள் வாழ்ந்து மறைந்ததுண்டு. ஆனால் மறைந்த பின்னும் வாழ்பவர்கள் வெகு சிலரே. அப்படி ஒரு மாமனிதன் விஜயகாந்தின் பிறந்த தினம் இன்று.மாமனிதன் விஜயகாந்தின் பிறந்த தினம் இன்று!

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுகளை சுமந்து கொண்டு தனி ஒரு ஆளாக சென்னை வந்து கோடான கோடி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர் நடிகர் விஜயகாந்த். தனது திரைப்படங்களின் மூலம் பல அழுத்தமான சமுதாய கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார். சிகப்பு தோல் நடிகர்களுக்கு மத்தியில் கருப்பு வைரமாக ஜொலித்தவர் விஜயகாந்த். இவரை தமிழ் மக்கள் கருப்பு எம்.ஜி.ஆர், கேப்டன், புரட்சிக் கலைஞர் என்று அன்போடு அழைப்பர். அந்த வகையில் இவர் திரையில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக வாழ்ந்து உதவி கேட்பவர்களுக்கு முதல் ஆளாக வந்து உதவி செய்வார். திரைத் துறையிலும் பல நடிகர்களின் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கினார். மாமனிதன் விஜயகாந்தின் பிறந்த தினம் இன்று!இவ்வாறு சினிமாவை வெற்றிப் பாதைக்கு நகர்த்திக் கொண்டு போன விஜயகாந்த் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் செய்ய அரசியல்வாதியாகவும் உருவெடுத்தார். அதன்படி தேமுதிக என்ற கட்சியை தொடங்கி 2011 முதல் 2016 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து தமிழக அரசியலில் முக்கிய இடம் பிடித்தார். இவருடைய கம்பீர நடையையும் கர்ஜிக்கும் குரலையும் இன்றுவரையிலும் யாராலும் மறக்க முடியாது. அதாவது குழந்தையின் மென்மையையும் சிங்கத்தின் கம்பீரத்தன்மையும் ஒருங்கே கொண்டவர் என்றால் அது விஜயகாந்த் தான். மாமனிதன் விஜயகாந்தின் பிறந்த தினம் இன்று!திரைத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் முகம் தெரியாதவர்களுக்கும் உதவி செய்து உண்மையிலேயே அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனாக வாழ்ந்த சொக்கத்தங்கம். கடந்தாண்டு டிசம்பர் மாதம் இவருடைய மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு. ஆனாலும் விஜயகாந்த் என்ற ஒரு பெயர் கோடான கோடி மக்களின் நெஞ்சங்களில் இன்று வரையிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனவே (ஆகஸ்ட் 25) விஜயகாந்தின் பிறந்த நாளான இன்று அவரையும் அவர் செய்த நல்ல விஷயங்களையும் பெருமையுடன் நினைவு கூர்வோம்.

MUST READ