Homeசெய்திகள்சினிமாசசிகுமார் இயக்கும் வெப் சீரிஸில் விஜயகாந்த் மகன்!

சசிகுமார் இயக்கும் வெப் சீரிஸில் விஜயகாந்த் மகன்!

-

சசிகுமார் இயக்கும் வெப் சீரிஸில் நடிக்கும் விஜயகாந்த் மகன்!நடிகரும் இயக்குனருமான சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதன் பிறகு ஈசன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. அதைத் தொடர்ந்து படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார் சசிகுமார். சுந்தரபாண்டியன், நாடோடிகள் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார் சசிகுமார். குறிப்பாக சசிகுமார் நடிப்பில் நடப்பாண்டில் வெளியான அயோத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சசிகுமார் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போகிறார் என்று அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதன்படி நடிகரும் எழுத்தாளருமான வேலராமமூர்த்தி எழுதிய குற்றபரம்பரை எனும் நாவலை தழுவி வெப் சீரிஸ் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.சசிகுமார் இயக்கும் வெப் சீரிஸில் நடிக்கும் விஜயகாந்த் மகன்!

இந்நிலையில் இதன் புதிய அப்டேட் என்னவென்றால் இந்த குற்ற பரம்பரை வெப் சீரிஸில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது படை தலைவன் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ