Homeசெய்திகள்சினிமாதிரிஷாவிற்காக குரல் கொடுக்கும் குஷ்பூ எனக்காக ஏன் கொடுக்கவில்லை..... கொந்தளித்த விஜயலட்சுமி!

திரிஷாவிற்காக குரல் கொடுக்கும் குஷ்பூ எனக்காக ஏன் கொடுக்கவில்லை….. கொந்தளித்த விஜயலட்சுமி!

-

நடிகை விஜயலட்சுமி தமிழ் சினிமாவில் பிரண்ட்ஸ், எஸ் மேடம், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ள படங்களில் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கைவிட்டதாக வழக்கு தொடுத்திருந்தார். சீமான் – விஜயலட்சுமி விவகாரம் அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் இவர்களின் நியூஸ் தான் அதிகம் பகிரப்பட்டது.திரிஷாவிற்காக குரல் கொடுக்கும் குஷ்பூ எனக்காக ஏன் கொடுக்கவில்லை..... கொந்தளித்த விஜயலட்சுமி!

அதுபோல இரண்டு நாட்களாக நடிகர் மன்சூர் அலிகான், திரிஷா குறித்து அநாகரிகமாக பேசினார் என்று அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதில் நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையம் சார்பில் மன்சூர் அலிகான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுபோன்ற பெண்களை இழிவாக பேசுபவர்களை எளிதில் விட்டு விடக்கூடாது என்றும் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு திரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை விஜயலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “அன்று சீமான் என்னை விபச்சாரி என்று கூறினார். வீரலட்சுமியை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். அப்போது நான் குஷ்புவிடம் சீமான் குறித்து தெரிவித்தேன். குஷ்பூ எதையுமே கண்டுகொள்ளவில்லை. அப்போதெல்லாம் குஷ்பூ எங்க போனாங்க. இப்ப திரிஷாவுக்கு மட்டும் குரல் கொடுக்குறாங்க ஏன்? பிஜேபிக்கு ஒன்னுன்னா சீமான் ஓடி வராருல அந்த நன்றியா?” என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்.

இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

MUST READ