விஜய் நடிப்பில் உருவாகியிருந்த கோட் திரைப்படம் நேற்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். சித்தார்த்தா நுனி படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மைக் மோகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு நடிகர் விஜயை ஒரே படத்தில் வில்லனாகவும் ஹீரோவாகவும் பார்ப்பது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்தது. திரைக்கதையும் இசையும் படத்திற்கு பெரும் பலம் அளித்தது. எனவே விஜய் ரசிகர்கள் பலரும் கோட் திரைப்படத்தை தளபதி திருவிழாவாக கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் முதல் நாளில் கிட்டத்தட்ட 45 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேசமயம் தமிழ்நாட்டில் மட்டுமே 35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம். மேலும் கேரளாவில் 2 கோடியும் ஆந்திராவில் 2 கோடியும் வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -