நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படம் டைம் ட்ராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் சமீபத்தில் விசில் போடு எனும் பாடலும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இந்த படமானது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் பட குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் கோட் படக்குழு படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டு போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை தொடங்கி விட்டதாக அப்டேட் கிடைத்துள்ளது. இதனை அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக நடிகர் விஜய் 50 சதவீத டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே கோட் படக்குழு தரமான சம்பவத்திற்கு தயாராகி வருகிறது என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.