Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போகும் விஜயின் 'ஜனநாயகன்'..... உறுதி செய்த படக்குழு?

தள்ளிப்போகும் விஜயின் ‘ஜனநாயகன்’….. உறுதி செய்த படக்குழு?

-

- Advertisement -

நடிகர் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தள்ளிப்போகும் விஜயின் 'ஜனநாயகன்'..... உறுதி செய்த படக்குழு?இதைத்தொடர்ந்து நடிகர் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் தன்னுடைய 69 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ள விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி நேற்று (ஜனவரி 26) குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அதுவும் இரண்டாவது போஸ்டரில் நான் ஆணையிட்டால் என்று எம்ஜிஆரை போல் போஸ் கொடுத்திருக்கிறார் விஜய். மேலும் ஜனநாயகன் என்ற யாரும் எதிர்பார்க்காத தலைப்பை ரசிகர்களும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தள்ளிப்போகும் விஜயின் 'ஜனநாயகன்'..... உறுதி செய்த படக்குழு?அரசியல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போதே இப்படம் 2025 அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று வெளியான 2 போஸ்டர்களிலும் வெளியீடு குறித்த எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. ஆகையினால் ஏற்கனவே வெளியான தகவலின் படி இப்படம் 2026 பொங்கலுக்கு தள்ளிப்போகுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன் திரைப்படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ