Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் 51 வது படம் குறித்த முக்கிய அப்டேட்!

விஜய் சேதுபதியின் 51 வது படம் குறித்த முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

விஜய் சேதுபதியின் 51 வது படம் குறித்த முக்கிய அப்டேட்!விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்திமொழி படங்களிலும் கலக்கி வருகிறார். அதேசமயம் வில்லனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து இவர் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து சாதனை படைத்தது. அதே சமயம் தமிழில் விடுதலை இரண்டாம் பாகம், மகாராஜா போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் பாலிவுட்டில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்மஸ் திரைப்படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இயக்குனர் மிஸ்கினுடன் இணைந்து ட்ரெயின் எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி சமீபத்தில் வில்லனாக இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் சேதுபதியின் 51 வது படம் குறித்த முக்கிய அப்டேட்!

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் 51 வது படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் 51வது படத்தை ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தை இயக்கிய பி. ஆறுமுக குமார் இயக்குகிறார். 7 Cஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. ருக்மணி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். VJS51 படமானது காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பக்கா கமர்சியல் படமாக உருவாகி வருகிறது. விஜய் சேதுபதியின் 51 வது படம் குறித்த முக்கிய அப்டேட்!இந்த படத்தின் படப்பிடிப்புகள் மலேசியா பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களை அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் விரைவில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ