நடிகர் விக்ரம், பிரபல தயாரிப்பாளர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
நடிகர் விக்ரம் கடைசியாக தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். கோலார் தங்க வயலில் தங்கம் எப்படி கண்டறியப்படுகிறது என்பது தொடர்பான கதைக்களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து வருகின்ற மார்ச் 27ஆம் தேதி விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை அருண்குமார் இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம், பைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில் மகன் அஜயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.