Homeசெய்திகள்சினிமாசியான்62 வில் நான் கமிட்டாகியதற்கு விக்ரம் தான் காரணம்.... மனம் திறந்த ஜிவி பிரகாஷ்!

சியான்62 வில் நான் கமிட்டாகியதற்கு விக்ரம் தான் காரணம்…. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்!

-

சியான்62 வில் நான் கமிட்டாகியதற்கு விக்ரம் தான் காரணம்.... மனம் திறந்த ஜிவி பிரகாஷ்!ஜிவி பிரகாஷ் குமார், தான் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனி ஸ்டைலை பின்பற்றி பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று படத்துக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். ஜிவி பிரகாஷின் இசையில் அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களை அதிர வைத்தது. இந்த படத்துக்காக சியான் விக்ரமுக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என்று கூட ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த அளவிற்கு விக்ரமின் தோற்றமும் அவருடைய நடிப்பும் டீசரிலேயே வெளிப்பட்டது. இந்நிலையில் விக்ரமின் 62 ஆவது படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளாராம். சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், சித்தா போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் தான் இப்படத்தை இயக்க உள்ளார்.சியான்62 வில் நான் கமிட்டாகியதற்கு விக்ரம் தான் காரணம்.... மனம் திறந்த ஜிவி பிரகாஷ்! இது குறித்து அப்டேட்டை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, தங்கலான் திரைப்படத்தின் டீசரை பார்த்து விக்ரம்,ஜிவி பிரகாஷு க்கு போன் செய்து பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. எப்படி நீங்கள் இதை செய்தீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டதுடன், என் அடுத்த படத்திலும் நீங்கள் இதுபோல பண்ண முடியுமா என்று கேட்டதாகவும் கூறியுள்ளார். எனவே விக்ரம் தான் தன்னை ஜிவி பிரகாஷ் சியான்62 படத்தில் கமிட் செய்தார் என்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார் ஜி.வி பிரகாஷ்.

மேலும் தங்கலான் டீசரிலையே இவ்வளவு மிரட்டலான இசையை கொடுத்த ஜிவி பிரகாஷ் படம் முழுக்க எத்தகைய இசையை கொடுத்திருப்பார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

MUST READ