நடிகர் விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேசமயம் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக விக்ரம், வீர தீர சூரன் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை எச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்குகிறார். இதில் விக்ரமுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சர மூடு, சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இந்த படத்தின் போஸ்டர் வன்முறையை தூண்டுவதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் விக்ரம் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான பரிமாணத்தில் நடித்து வருவதால் அடுத்ததாக விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் வீர தீர சூரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில்தான் இதன் முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் விக்ரம் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -