Homeசெய்திகள்சினிமாதீபாவளி போட்டியில் இணைந்த விக்ரம் பிரபுவின் "ரைடு"

தீபாவளி போட்டியில் இணைந்த விக்ரம் பிரபுவின் “ரைடு”

-

- Advertisement -

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ரைடு திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டாணாக்காரன் படத்தின் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் விக்ரம் பிரபு. அவரது நடிப்பில் அண்மையில் வெளியான இறுகப்பற்று திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப உறவுகளை பற்றி பேசும் இத்திரைப்படம் வசூலை குவிக்கிறது. இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ரைடு.

தீபாவளி போட்டியில் இணைந்த விக்ரம் பிரபுவின் "ரைடு"

ரைடு திரைப்படத்தை கார்த்தி இயக்கி இருக்கிறார். கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் படத்தை தயாரித்து இருக்கின்றனர். ஸ்ரீ திவ்யா படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். படத்திற்கு பிரபல இயக்குநர் முத்தையா வசனம் எழுதி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு தவிர, அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். இந்நிலையில், ரைடு திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, கார்த்தியின் ஜப்பான் மற்றும் ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கும் நிலையில், தற்போது தீபாவளி போட்டியில் விக்ரம் பிரபுவின் ரெய்டு திரைப்படமும் இணைந்துள்ளது.

MUST READ