Homeசெய்திகள்சினிமாதங்கம் கடத்தல் வழக்கில் விக்ரம் பிரபு பட நடிகை கைது!

தங்கம் கடத்தல் வழக்கில் விக்ரம் பிரபு பட நடிகை கைது!

-

- Advertisement -

விக்ரம் பிரபு பட நடிகை ஒருவர் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.தங்கம் கடத்தல் வழக்கில் விக்ரம் பிரபு பட நடிகை கைது!

பிரபல நடிகை ரான்யா ராவ் கன்னட சினிமாவில் மாணிக்யா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அடுத்தது இவர் தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்னர் படாக்கி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழிலும் சரி, கன்னடத்திலும் சரி பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை ரான்யா ராவ். இந்நிலையில் தான் இவர் துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் தனது உடலில் ஏகப்பட்ட நகைகளை அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே ரான்யா ராவ் மீது சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய உடைமைகளையும் சோதித்தபோது அதிக அளவிலான தங்கநகை, தங்க பிஸ்கட்கள், தங்க கட்டி என மொத்தமாக 14 கிலோவிற்கு மேலான தங்கம் ரான்யா ராவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தங்கம் கடத்தல் வழக்கில் விக்ரம் பிரபு பட நடிகை கைது!அதாவது 14.80 கிலோ தங்கத்தினை துபாயில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வந்திருப்பதாக ரான்யா ராவ்- ஐ கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் வேறு நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ரான்யா ராவின் தந்தை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்றும் தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ