இறுகப்பற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விக்ரம் பிரபு நடிப்பில் இறுகப்பற்று எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் இதில் விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விதாரத்துக்கு ஜோடியாக அபர்னதி நடித்துள்ளார். மேலும் ஶ்ரீ, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூன்று விதமான தனித்தனி காதலைப் பற்றி படம் பேசுகிறது.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன் எழுதி, இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜஸ்டின் பிரபாகரன் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. கோகுல் பினாய் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Get ready to unravel the complexities of love and relationships in #Irugapatru💞
Trailer from tomorrow.@iamVikramPrabhu @Shraddhasrinath @vidaarth_actor #Shri @abarnathi21 #SaniyaIyyapan @justin_tunes @gokulbenoy @eforeditor @justin_tunes @SaktheeArtDir @YDhayalan @rthanga… pic.twitter.com/9CVQ37kNpI
— Potential Studios LLP (@Potential_st) September 20, 2023
சில நாட்களுக்கு முன்பாக இறுகப்பற்று திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் கான்செப்ட் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.