Homeசெய்திகள்சினிமாபிரித்விராஜ் இயக்குனராக மாறியது அதிர்ச்சியாக இருக்கிறது..... விக்ரம் பேச்சு!

பிரித்விராஜ் இயக்குனராக மாறியது அதிர்ச்சியாக இருக்கிறது….. விக்ரம் பேச்சு!

-

- Advertisement -

நடிகர் விக்ரம், பிரித்விராஜ் இயக்குனராக மாறியது அதிர்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.பிரித்விராஜ் இயக்குனராக மாறியது அதிர்ச்சியாக இருக்கிறது..... விக்ரம் பேச்சு!

விக்ரம் நடிப்பில் தற்போது வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. அருண்குமார் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே இதன் டீசர், ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. எனவே வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வரும் முன் வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் வந்து ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்காக, ப்ரோமோஷன் பணிகளும், மற்ற ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரித்விராஜ் இயக்குனராக மாறியது அதிர்ச்சியாக இருக்கிறது..... விக்ரம் பேச்சு!இந்நிலையில் இப்படம் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் மோகன்லாலின் எம்புரான் திரைப்படமும் திரைக்கு வருகிறது. பான் இந்திய அளவில் வெளியாகும் இந்த படத்தை பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே பிரித்விராஜ் சுகுமாரன் லூசிபர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி டிக்கெட் முன்பதிவிலும் இந்த படம் மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் விக்ரம் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதன்படி அவர் பேசியதாவது, “மலையாள சினிமாவில் சாதனை படைக்கும் முதல் பான் இந்திய படமாக எம்புரான் திரைப்படம் இருக்கும் என்று நம்புகிறேன். வீர தீர சூரன் படமும், எம்புரான் படத்துடன் வருவது மகிழ்ச்சி. தனுஷை போல் பிரித்விராஜ் இயக்குனராக மாறி லூசிபர் படத்தை கொடுத்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ