Homeசெய்திகள்சினிமாவிக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்'.... மிரட்டலான டீசர் வெளியீடு!

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’…. மிரட்டலான டீசர் வெளியீடு!

-

- Advertisement -

விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

நடிகர் விக்ரம் கடைசியாக தங்கலான் படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் விக்ரம். விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்'.... மிரட்டலான டீசர் வெளியீடு!இந்த படத்திற்கு வீர தீர சூரன் பாகம் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. விக்ரமின் 62 வது படமான இந்த படத்தினை ஹெச். ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் மதுரை, தென்காசி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரும் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் காட்டப்படுகின்றனர். ஆக்சன் காட்சிகளும் காட்டப்படுகிறது. அதன்படி இப்படம் கிராமப்புற ஆக்சன் கலந்த கதை போல் தெரிகிறது.

பின்னணி இசையும் மிரட்டலாக அமைந்துள்ளது. எனவே அருண்குமாரின் மற்ற படங்களை போல் இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த டீசரின் இறுதியில் இப்படமானது 2025 ஜனவரி மாதம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ