Homeசெய்திகள்சினிமாவிக்ரம், விஜய் சேதுபதி, நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

விக்ரம், விஜய் சேதுபதி, நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

-

நடிகர் விக்ரம், விஜய் சேதுபதி மற்றும் நிவின் பாலி கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப் , 2018 என்ற திரைப்படத்தை இயக்கியவர். டோவினோ தாமஸ் நடித்திருந்த இந்த படம் கடந்த மே 5ம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து ஜூட் ஆந்தணி ஜோசப் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி இவர் இயக்கம் புதிய படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நிவின் பாலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஜூட் ஆந்தணி ஜோசப், விஜய் சேதுபதி, நிவின் பாலி ஆகியோரின் கூட்டணியில் நடிகர் விக்ரம் இணைய இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

நடிகர் விக்ரம் ஏற்கனவே பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே சமயம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

MUST READ