நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து தனது அடுத்த படமான மகான் படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார்.இவருக்கு இந்த இரு படங்களுமே ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
மகான் திரைப்படத்தில் துருவ் விக்ரம் மற்றும் விக்ரமுடன் பாபி சிம்ஹா, சிம்ரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில் மகான் 2? என்ற கேள்வி குறியோடு பதிவிட்டிருக்கிறார். அதோடு போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். இதநால், மகான் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதனால் தான் விக்ரம் இவ்வாறு பதிவிட்டிருப்பதாகவும் தெரிகிறது. மகான் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், இதுவரை மகான் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. மேலும், விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.