Homeசெய்திகள்சினிமாஒரு வழியா ஓடிடியில் வெளியிடப்பட்ட விக்ரமின் 'தங்கலான்'!

ஒரு வழியா ஓடிடியில் வெளியிடப்பட்ட விக்ரமின் ‘தங்கலான்’!

-

- Advertisement -

விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி விக்ரம் நடிப்பில் தங்கலான் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். ஒரு வழியா ஓடிடியில் வெளியிடப்பட்ட விக்ரமின் 'தங்கலான்'!ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் விக்ரம் தவிர பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கோலார் வயலில் தங்கம் கண்டறிவது தொடர்பான கதைக்களத்தில் இந்த படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இருப்பினும் இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. அதாவது இந்த படத்தில் புத்த மதத்தை உயர்வாகவும் வைணவ மதத்தை தாழ்வாகவும் பிரதிபலிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்ததாகவும் இந்த படத்தினை ஓடிடியில் வெளியிட தடை செய்ய வேண்டும் எனவும் திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஒரு வழியா ஓடிடியில் வெளியிடப்பட்ட விக்ரமின் 'தங்கலான்'!அதன் பிறகு உயர்நீதிமன்றம் படத்தை ஓடிடியில் வெளியிட எந்த தடையும் இல்லை என தீர்ப்பு வழங்கிய நிலையில் தங்கலான் திரைப்படம் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

MUST READ