வீர தீர சூரன் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு தங்கலான் எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் பாகம் 2 எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். இப்படமானது ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் இன்று (ஜனவரி 11) இந்த படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது. ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வரும் என சமீப காலமாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. ஆனால் அஜித்தின் விடாமுயற்சி படக்குழு வருகின்ற ஜனவரி 23ஆம் தேதியை லாக் செய்திருக்கும் நிலையில் வீர தீர சூரன் திரைப்படத்தின் ரிலீஸ் 2025 மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.