Homeசெய்திகள்சினிமாசினிமாவை விட்டு விலக நினைத்தேன் - நடிகர் விக்ராந்த்

சினிமாவை விட்டு விலக நினைத்தேன் – நடிகர் விக்ராந்த்

-

- Advertisement -
தளபதி என்று கோலிவுட்டே கொண்டாடும் நடிகர் விஜய்யின் சகோதரரும், தமிழ் நடிகரும் ஆவார் விக்ராந்த். இவர் தமிழில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும், 2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தான் நாயகனாக அறிமுகமானார். காதல் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் முத்திரை பதித்தார் நடிகர் விக்ராந்த். இதைத் தொடர்ந்து முத்துக்கு முத்தாக படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து, கோரிப்பாளையம் திரைப்படம், பாண்டியநாடு, கவண், கெத்து ஆகிய படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கெத்து படத்தில் விக்ராந்த் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். தற்போது விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யாா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வரும் மார்ச் 9-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், லால் சலாம் பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ராந்த், சினிமாவுக்குள் நுழைந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்க முடிவு செய்தேன். அந்த நேரத்தில் தான், லால்சலாம் படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது சரியான நேரத்தில் இயற்கை தந்த கொடை தான் என்று தெரிவித்தார். மேலும், தன் சினிமா வாழ்வை நிச்சயம் இத்திரைப்படம் மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

MUST READ