Homeசெய்திகள்சினிமாரஜினிக்கு மகனாக நடிக்கும் விக்ராந்த்.... விஷ்ணு விஷால் கிளப்பிய புது பஞ்சாயத்து.... 'லால் சலாம்' அப்டேட்!

ரஜினிக்கு மகனாக நடிக்கும் விக்ராந்த்…. விஷ்ணு விஷால் கிளப்பிய புது பஞ்சாயத்து…. ‘லால் சலாம்’ அப்டேட்!

-

- Advertisement -

ரஜினிக்கு மகனாக நடிக்கும் விக்ராந்த்.... விஷ்ணு விஷால் கிளப்பிய புது பஞ்சாயத்து.... 'லால் சலாம்' அப்டேட்!ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரஜினி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நிரோஷா நடிக்கிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து சமீபத்தில் முதல் பாடலும் வெளியாகி கவனம் பெற்றது. மேலும் இப்படம் 2024 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.ரஜினிக்கு மகனாக நடிக்கும் விக்ராந்த்.... விஷ்ணு விஷால் கிளப்பிய புது பஞ்சாயத்து.... 'லால் சலாம்' அப்டேட்!

மேலும் இந்த படத்தில் நடிகர் விக்ராந்த் ரஜினிகாந்துக்கு மகனாக நடித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விக்ராந்தின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விஷ்ணு விஷால், தன் கதாபாத்திரத்தை விட விக்ராந்தின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பது தொடர்பாக புதிய பஞ்சாயத்தை கிளப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விக்ராந்தை விட தனக்கு முக்கியத்துவம் நிறைந்ததாக காட்சிகளை மாற்றி அமைக்குமாறு விஷ்ணு விஷால் கூறி வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ரஜினிக்கு மகனாக நடிக்கும் விக்ராந்த்.... விஷ்ணு விஷால் கிளப்பிய புது பஞ்சாயத்து.... 'லால் சலாம்' அப்டேட்!

இது தொடர்பாக ரசிகர்கள் பலரும் பல ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணு விஷால் வளர்ந்து வரும் நடிகரான விக்ராந்திற்கு லால் சலாம் படத்தின் மூலம் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கட்டாகுஸ்தி படத்தில் தன்னைவிட ஐஸ்வர்யா லட்சுமிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த விஷ்ணு விஷால், சக நடிகருக்கு அந்த வாய்ப்பை ஏன் விட்டுக் கொடுக்க மறுக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.

MUST READ