Homeசெய்திகள்சினிமாவிக்ராந்த் நடிக்கும் புதிய படம்..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விக்ராந்த் நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.விக்ராந்த் நடிக்கும் புதிய படம்..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் விக்ராந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராவார். இவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த நிலையில் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தது, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK23 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விக்ராந்த். அதேசமயம் இவர் வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தி கில்லர் மேன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் விக்ராந்துடன் இணைந்து நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை பிக் பாங் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க பால முரளி பாலு இதற்கு இசையமைக்கிறார். விக்ராந்த் நடிக்கும் புதிய படம்..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!கே.கே இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் இப்படம் ஆனது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ