விமல் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விமல் சமீப காலமாக கிராமத்துக் கதைக்களம் கொண்ட படங்களில் அதிகம் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் சரவணசக்தி இயக்கத்தில் குலசாமி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். MIK ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த படம் கலையான விமர்சனத்தையே பெற்றது.
இதற்கிடையில் விமல், விலங்கு என்னும் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.இதில் விமலுடன் இனியா, முனீஸ் காந்த், ரேஷ்மா பசுபுலேட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர். புலனாய்வு திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த வெப்சீரிசை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். இது கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் விலங்கு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விமல் மற்றொரு வெப் சீரிஸில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதனை கடந்த 2017 ஆம் ஆண்டு நடராஜன் நடிப்பில் வெளியான எங்கிட்ட மோதாதே திரைப்படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இயக்குகிறார். இந்த வெப் சீரிஸில் விமலுடன் இணைந்து திவ்யா துரைசாமி, பிக்பாஸ் பாவனி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
மேலும் இந்த வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.