விமல் நடிக்கும் துடிக்கும் கரங்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விமல் சமீபத்தில் சரவண சக்தி இயக்கிய குலசாமி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைத்தொடர்ந்து விமல் புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.இவர் ஏற்கனவே விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் விமல் துடிக்கும் கரங்கள் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விமலுடன் இணைந்து மிஷா நரங், சௌந்தர்ராஜ், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வேலுதாஸ் இதனை எழுதி இயக்கியுள்ளார்.
ஒடியன் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் கே அண்ணாதுரை படத்தை தயாரித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் டீசர் அதைத் தொடர்ந்து இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.