விமல் நடித்திருக்கும் சார்… வெளியானது டீசர்…
விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் சார் படத்தின் டீசர் வௌியாகி உள்ளது
கோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விமல். இவர் தொடக்கம் முதலே கிராமத்து கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே பெரும்பாலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு, இயக்குனர் சரவணசக்தி இயக்கத்தில் குலசாமி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். MIK ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த படம் கலையான விமர்சனத்தை பெற்றது. இதனிடையே விலங்கு எனும் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.இதில் விமலுடன் இனியா, முனீஸ் காந்த், ரேஷ்மா பசுபுலேட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர். புலனாய்வு திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த வெப் தொடர் அதிரி புதிரி ஹிட் அடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றது.
மேலும், இந்த தொடர் நடிகர் விமலுக்கு ஒரு கம்பேக்காகவும் அமைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது தேசிங்கு ராஜா 2 மற்றும கலகலப்பு 3 என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில், சார் என்ற புதிய திரைப்படத்திலும் விமல் நடித்திருக்கிறார். இப்படத்தை பிரபல குணச்சித்திர நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கி இருக்கிறார். வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும், எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி நிறைவு பெற்றது.
இப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று சமூக வலைதளங்களில் வௌியாகி இருக்கிறது. இது டிரெண்டாகி வருகிறது.