Homeசெய்திகள்சினிமாமகனை இயக்கும் விருமன் பட இயக்குனர் ..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மகனை இயக்கும் விருமன் பட இயக்குனர் ….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் முத்தையா கிராமத்து பின்னணியில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். மகனை இயக்கும் விருமன் பட இயக்குனர் ..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி படத்தை இயக்கி பிரபலமடைந்தார். பின்னர் கொம்பன், மருது, தேவராட்டம், விருமன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக முத்தையா ஆர்யா நடிப்பில் வெளியான காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. எனவே அடுத்ததாக தன் மகனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். முத்தையாவின் மகன் விஜய் முத்தையா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் தர்ஷினி, ப்ரிகிடா சாகா போன்றவர்கள் விஜய் முத்தையாவுடன் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகனை இயக்கும் விருமன் பட இயக்குனர் ..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!அதே சமயம் இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த படத்திற்கு சுள்ளான் சேது என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ