விஷால் நடிப்பில் உருவாகி வரும் விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பு பற்றிய தகவலை பட குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரின் கூட்டணியில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதற்கிடையில் விஷால், இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் 34 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஷால் 34 படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கியமான அறிவிப்பு இன்று மாலை 5 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குனர் ஹரி, சாமி, ஐயா ,ஆறு உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் என்பதும் கடைசியாக இவர் அருண் விஜய் நடிப்பில் யானை திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.