Homeசெய்திகள்சினிமாவிஷால், ஹரி காம்போவின் ரத்னம்....அறிவிப்பு டீஸர் வெளியீடு!

விஷால், ஹரி காம்போவின் ரத்னம்….அறிவிப்பு டீஸர் வெளியீடு!

-

விஷால், ஹரி காம்போவின் ரத்னம்....அறிவிப்பு டீஸர் வெளியீடு!தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஹரி, விஷால் கூட்டணியில் விஷால் 34 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ரத்னம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு டீசர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைத்துள்ளார். எம் சுகுமார் இதற்கு இசையமைத்துள்ளார்.

இந்த சிறப்பு அனிமேஷன் வீடியோவில்  மாடுகள் மற்றும் குதிரைகள் மிரண்டு ஓட லாரியிலிருந்து இறங்கும் விஷால் கிராமத்துக் கோயிலின் வாசலில் நடப்பட்டிருக்கும் அரிவாள் ஒன்றை கையில் எடுக்கிறார். சாமி சிலையின் முன்னால் கை கால்கள் கட்டப்பட்டு முட்டி போட வைத்திருக்கும் எதிரியின் தலையை வெட்டி அதை ஒரு கையில் பிடித்துக் கொண்டு நடக்கிறார். அனிமேஷன் காட்சிகளிலேயே ரத்தம் தெறிக்கிறது. கீழே விழும் ரத்தத்தின் ஒரு துளி ரத்னம் என படத்தின் டைட்டிலாக மாறுகிறது. மாஸ் மசாலா காட்சிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த டீசரிலேயே தெரிகிறது. இது மெடிக்கல் மாஃபியாவால் பாதிக்கப்பட்ட ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் கதை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 80 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ