இயக்குனர் ஹரி மற்றும் விஷால் இணைந்து பணியாற்றும் புதிய படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளன.
இயக்குனர் ஹரி அதிரடி ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படங்கள் கொடுப்பதில் கைதேர்ந்தவர். இவரது படங்கள் அவ்வளவு வேகமாக நகரும். சாமி, சிங்கம் என அதிரடி போலீஸ் படங்களைக் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியவர் ஹரி.
இந்நிலையில் இயக்குனர் ஹரி அடுத்ததாக விஷால் உடன் புதிய படத்திற்காக கூட்டணி அமைக்கிறார்.
தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்தின் பூஜையில் விஷால், ஹரி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஹரி- விஷால் கூட்டணியில் வெளியான இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனவே இந்தப் படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவும் என்று தெரிகிறது.
இதற்கிடையில் விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.