விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு விஷாலின் 34 வது படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்கண்டனை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து விஷால் தனது 34 வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன்பாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஷாலின் 46வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், விஷால் 34 படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.