கடந்த 2007 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் தாமிரபரணி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து பூஜை படத்திலும் விஷால் மற்றும் ஹரியின் கூட்டணி இணைந்து தரமான சம்பவம் செய்தது. இந்த இரண்டு படங்களிலுமே ஆக்ஷன் காட்சிகள் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. இந்நிலையில் மூன்றாவது முறையாக ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் ரத்னம் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் பூஜை உடன் தொடங்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி, திருப்பதி, வேலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக், முதல் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை பட குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகின்ற 2024 ஏப்ரல் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படத்தின் டீசர், ட்ரைலர் சம்பந்தமான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.