Homeசெய்திகள்சினிமாவெறித்தனமான உடற்பயிற்சியில் விஷால்... அவரே வெளியிட்ட வீடியோ...

வெறித்தனமான உடற்பயிற்சியில் விஷால்… அவரே வெளியிட்ட வீடியோ…

-

- Advertisement -
தமிழில் செல்லமே திரைப்படத்தின் மூலம் விஷால் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படம் சண்டக்கோழி. இத்திரைப்படம் அவரை ஆக்‌ஷன் ஹீரோவாகா கோலிவுட் திரையுலகில் முன்னிறுத்தியது. இத்திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

இறுதியாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரத்னம். ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ரத்னம் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இவர்களின் கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல, ரத்னம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

https://x.com/i/status/1797631543319613482

இதைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெறித்தனமாக நடிகர் விஷால் உடற்பயிற்சி செய்யும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது அடுத்த படத்திற்காக விஷால் தயாராகி வருகிறாரா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ