Homeசெய்திகள்சினிமா'விஜய்க்கு தம்பியாக நடிக்க என்னை தான் கேட்டார்கள்'...... லியோ குறித்து நடிகர் விஷால்!

‘விஜய்க்கு தம்பியாக நடிக்க என்னை தான் கேட்டார்கள்’…… லியோ குறித்து நடிகர் விஷால்!

-

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்தில் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது.

லியோ திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருவதற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது.

மேலும் சமீபத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டோரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் விஷால் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “லோகேஷ் கனகராஜ் முதலில் விஜய்க்கு தம்பியாக ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டார். என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாததால் அந்த கதாபாத்திரம் மாறிவிட்டது. தம்பியின் கதாபாத்திரம் அண்ணன் கதாபாத்திரமாக மாறிவிட்டது. விஜய் அண்ணனாக தற்போது அர்ஜுன் நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.  விஷால் ஏற்கனவே மார்க் ஆண்டனி பிரஸ்மீட் ஒன்றை லியோ பட வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நடிகர் அர்ஜுன் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

MUST READ