விஷால் நடிக்கும் ரத்னம் படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் விஷால், தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் மூன்றாவது முறையாக ரத்னம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். எம் சுகுமார் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஹரியின் மற்ற படங்களைப் போலவே இந்த படமும் ஆக்சன் கலந்த கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. ஏற்கனவே ரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் முதல் பாடலையும் பட குழுவினர் வெளியிட்டு கவனம் பெற்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி நண்பகல் 12 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அறிவித்துள்ளனர். மேலும் இந்த பாடல் விஷாலுக்கும் பிரியா பவானி சங்கருக்குமான மெலோடி பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.