நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, AAA, பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் சுனில் ,எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், ரித்து வர்மா, ஒய் ஜி மகேந்திரன், அபிநயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் மினி ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பு ஜிவி பிரகாஷின் இசையமைப்பிலும் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்த படத்தை அடுத்து விஷால் தனது 34 ஆவது படத்தை இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ மற்றும் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்க உள்ளது.
தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களை அடுத்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர்.தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் தமிழ்நாடு கேரளா ஆந்திரா போன்ற இடங்களில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.