விஷால் மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்தது.
விஷால் நடிப்பில் உருவாகிய மார்க் ஆண்டனி திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதை தொடர்ந்து விஷால்தானது 34 ஆவது படத்தை இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ நிறுவனமும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்க இருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து, படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் அண்மையில் விஷால் அறிவித்தார். அது தொடர்பானபுகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவு அடைந்ததாக விஷால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.டீசர் மற்றும் முதல் தோற்றம் குறித்த அப்டேட்டுகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.