ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 34-வது படத்திற்கு ரத்தினம் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அன்பானவன் அடங்காதவன் அசராதவன் , பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் வெளியான மார்க் ஆண்டனி, உலக அளவில் அதிக வசூலை ஈட்டி வெற்றி பெற்றது.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷால், தனது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சாமி, ஐயா ,ஆறு, உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹரி இயக்கி வருகிறார். இதில் விஷாலுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பாக தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.
~ விஷால் 34 ~#Vishal34 – the first collaboration of Puratchi Thalapathy @VishalKOfficial and Rockstar @ThisisDSP.
Get ready for the Title Reveal with FIRST SHOT today at 5PM. #Hari @priya_Bshankar @stonebenchers @ZeeStudiosSouth @mynnasukumar #TSJay @dhilipaction pic.twitter.com/IJJrjTbX84
— இது தமிழ் (@ithutamil) December 1, 2023